உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி பணிப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது கிடைக்கப்பெறும் மற்றும் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருள்களை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
போதுமான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து கடன் பத்திரங்களை வௌியிடுவதற்காக நிதி அமைச்சும் மத்திய வங்கியும் திட்டங்களை தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு, விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.