எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் S.P விதானகே இவ்வாறு...
இலங்கைக்கு 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவசரகால உணவு மற்றும் மருந்துப் பாவனைக்கான குறித்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றை விரைவாக விவசாயிகளுக்கு கையளிப்பதே நோக்கமாகும். இதன் பின்னர் ஒவ்வொருபோகத்திற்கும் தேவையான உரத்தை உரிய காலப்பகுதியில் வழங்குவது தொடர்பில் தேவையான நடவடிக்கை...
நாட்டுக்கு வந்துள்ள IMF பிரதநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரதிநிதிகள் குழு, ஜூன் 30 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சிக்கல்...
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் (IMF) குழு இன்று (20) நாட்டுக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள கடன் தொடர்பிலான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச்செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம்...
நாளை (20) முதல் காலை வேளைகளில் மின்வெட்டை அமுல்படுத்தப்படாமல் இருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....
இன்று (19) முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். எத்தகைய பிரச்சினை வந்தாலும் கட்டுப்பாட்டு விலையில் அரிசி சந்தைக்கு விற்கப்படும்...