தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல நடுவர் ரூடீ கேர்ட்சன் (Rudi Koertzen) வீதி விபத்தில் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 73 வயது. தென்னாப்பிரிக்காவின் ரிவர்டேல் என்ற பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் கேர்ட்சனனுடன் மேலும்...
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல்செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தள்ளுபடி செய்துள்ளது. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் கூட்டாக கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டது. கூட்டு ஒப்பந்தம் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல்போனாதால், தொழில் அமைச்சு தலையிட்டது. அதன்பின்னர் சம்பள நிர்ணய சபை ஊடாக நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டது. இந்த முடிவை முதலாளிமார் சம்மேளனம் ஏற்கவில்லை. சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பான மனு இன்று (09.08.2022) விசாரணைக்கு வந்தபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மனு தள்ளுப்படி செய்யப்பட்டது என பாரத் அருள்சாமி குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ” மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொழிலாளர்களுக்கும், காங்கிரசுக்கும் கிடைத்த வெற்றியாகும். அதேபோல தொழிலாளர்களை அடக்கி ஆளலாம் என எவரும் நினைக்ககூடாது. வாழ்க்கை செலவுக்கேற்பவே சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும். தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பது குறித்து நாளைய தினம் (10) விசேட...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1000 ரூபா சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் யோசனையை இரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மார்ச் 2021 இல் முதலாளிகள் சம்மேளனம் தாக்கல்...
மின் கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது. மின் கட்டணம் 2013 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான பிரேரணையை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (08) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, நீர் கட்டணத்தில் திருத்தம் செய்வது குறித்து...
தேனீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் உணவு பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியை இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் வரவேற்றுனர்.
பிரபல பாடகியும் நடிகையுமான ஒலிவியா நியூட்டன் ஜோன் (Olivia newton john) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (08) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1948 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில்...
இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகரில் இடம்பெற்ற 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த போட்களின் முடிவில் அவுஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடம் பிடித்தது. இங்கிலாந்து...
இலங்கையில் நேற்று மேலும் இரண்டு பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,583 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...