உள்நாட்டு செய்தி
நீர் கட்டணத்தில் திருத்தமா?

நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பான பிரேரணையை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (08) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, நீர் கட்டணத்தில் திருத்தம் செய்வது குறித்து எதிர்காலத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
எவ்வாறாயினும், கடந்த 10 வருடங்களாக நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.