Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்வரும் புதன்கிழமை முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

Published

on

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை மூன்று ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை (5) முதல் இந்த பஸ் கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போது 14 ரூபாவாக காணப்படும் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, அரச மற்றும் தனியார் பயணிகள் பேருந்துகளின் பஸ் கட்டணம் 17 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.