Sports
இலங்கை வரவுள்ள சிம்பாபே அணி

சிம்பாப்வே கிரிக்கெட் அணி அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி சிம்பாப்வே அணி இலங்கைக்கு வரவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அனைத்து போட்டிகளும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது ஒருநாள் போட்டி ஜனவரி 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடதக்கது.
Continue Reading