உள்நாட்டு செய்தி
மீனவர்களை பரிமாற்றத்தின் மூலம் விடுதலை செய்ய வேண்டும்

சிறையில் வாடும் இருநாட்டு மீனவர்களையும் பரிமாற்றத்தின் மூலம் விடுதலை செய்ய இரு நாட்டு அரசும் கவனம் செலுத்த வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீனவர்கள் தொடர்பாக கரிசனை மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி மீனவர்களை நல்லெண்ண அடிப்படையிலும் பொது மன்னிப்பின் மூலம் பரிமாறிக்கொண்டு மீனவர்களை அவர்களது குடும்பத்தோடு இணைந்து வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் என அவர் மன்னாரில் இன்று ஊடகங்களிடம் கூறியுள்ளார்.