உள்நாட்டு செய்தி
பேச்சுவார்த்தை தோல்வி

பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார்.
அதன்படி தொடர்ந்தும் பற்றுச் சீட்டுக்களை விநியோகித்தல், பொதிகளை பொறுப்பேற்றல் போன்ற கடமைகளில் இருந்து விலகுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.