Sports
ரபெல் நடாலுக்கு கொரோனா
20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான 35 வயது ரபெல் நடால் (ஸ்பெயின்) அபுதாபியில் கடந்த வாரம் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கண்காட்சி போட்டியில் பங்கேற்றார்.
இந்த நிலையில் போட்டி முடிந்து நாடு திரும்பிய அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது.
இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலை கடைபிடித்து வருகிறார்.
சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தகுந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் டுவிட்டர் மூலம் அறிவுறுத்து இருக்கிறார்.