உலகம்
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அங்கு 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 39 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் 44 பேர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,284 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.