உள்நாட்டு செய்தி
வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் இன்று நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத்திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றிருந்தது.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் கிடைத்திருந்தன.
இதன்படி, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.