உள்நாட்டு செய்தி
மன்னார் மாவட்டத்தில் கடும் மழை, 7257 குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்டத்தில் 7257 குடும்பங்களைச் சேர்ந்த 26,519 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 7252 குடும்பங்களைச் சேர்ந்த 26,499 நபர்களும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-இவர்களில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 367 குடும்பங்களைச் சேர்ந்த 1380 நபர்கள் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து 11 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.