Connect with us

Sports

இலங்கை மகளீர் அணியின் வாய்ப்பு பறிபோனது

Published

on

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியின் தகுதிச் காண் சுற்று போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி சிம்பாப்வேயின் ஹராரேயில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தோன்றிய புதிய கொவிட் வகை வைரஸ் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கைக்குக் இல்;லாது போயுள்ளது.