Connect with us

உள்நாட்டு செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை பட்டியலிட்டார் ஜனாதிபதி

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியோர் பொறுப்பு சொல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் நேற்று மாலை (24) ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

ஆணைக்குழு அறிக்கையில் பொறுப்பானவர்கள் யார் என்பது கூறப்பட்டுள்ளது. அதாவது முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அப்போதைய அமைச்சரவை தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என ஆணைக்குழு தெளிவுப்படுத்தியுள்ளது. ஆகவே எதிர்க் கட்சி சிலவற்றை கேட்கும் போது அவதானமாக இருக்க’ என்றார்.