உலகம்
வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் இரத்து
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் இரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வேதா நிலையத்தை 3 வாரங்களில் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வேதா நிலையம், மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு எனவும் சென்னை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதேவேளை, முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைக் குழுவில் வேறு நீதிபதிகளை இணைத்துக்கொள்ள முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.