Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னார் மாவட்டத்தில் கடந்த 23 நாட்களில் 470 கொரோனா தொற்றாளர்கள்

Published

on

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 23 நாட்களில் 470 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று (24) விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.