Connect with us

உள்நாட்டு செய்தி

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு இன்று

Published

on

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (13) இடம்பெறுகின்றது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இம்மாதம் 22ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும் என பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 05.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 10 ஆம் திகதி வரை 16 நாட்கள் நடைபெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.