உள்நாட்டு செய்தி
இன்று முதல் மழை வீழ்ச்சி குறைவடையும் சாத்தியம்

நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கபட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
அத்துடன், கேகாலை , கண்டி, குருணாகலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, றுவன்வெல்ல, ரம்புக்கன, அரநாயக்க, கேகாலை, மாவநெல்லை, புலத்ஹோபிட்டிய, வரக்காபொல, தெஹியோவிட்ட, கலிகமுவ, தெரணியகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரத்துள்ளது.
அதேபோ ல் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று முதல் மழை வீழ்ச்சி குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.