உள்நாட்டு செய்தி
சீமெந்து மூடையின் விலை அதிகரிப்பு

சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர், சீமெந்து மூடை ஒன்றின் விலையை 1, 275 ரூபா வரை அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதத்திலும் 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட சீமெந்து மூடை 1,093 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
தற்போது இரண்டாவது தடவையாகவும் சீமெந்து மூடையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.