உள்நாட்டு செய்தி
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு, சீமெந்து மூடையின் விலையும் உயர்ந்தது

செரண்டிப் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது
இன்றுமுதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை நேற்று முதல் அமுலாகும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து மூடையின் விலை 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி 50 கிலோகிராம் சீமெந்து மூடையின் விலை ஆயிரத்த 98 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஆயிரத்து 5 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.