உள்நாட்டு செய்தி
எதிர்வரும் 9 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை: சுகாதார தொழிற்சங்கங்கள்
சம்பள கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 9 ஆம் திகதி சுகாதார விடுமுறை எடுக்கவுள்ளதாக சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் 16 சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது தங்களது தொழிற் சங்க நடவடிக்கையில் குறிக்கோள் இல்லை என பொது சுகாதார வைத்திய பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.