உள்நாட்டு செய்தி
மாகாணங்களுக்கிடையிலான ரயில்சேவையினை முன்னெடுப்பது தொடர்பில் இன்று தீர்மானம்

மாகாணங்களுக்கிடையிலான ரயில்சேவையினை முன்னெடுப்பது தொடர்பில் இன்று இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுளள கொரோனா தடுப்பு செயலணியின் கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.-
இதேவேளை,ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கை தொடர்பிலும் இன்றைய தினம் தீர்மானம் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியும் என கொரோனா தடுப்பு செயலணி அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.