உள்நாட்டு செய்தி
அதிபர், ஆசிரியர்களின் நிலைப்பாடு

எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கடமைக்கு சமூகமளிக்க போவதில்லை என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.