உள்நாட்டு செய்தி
கொழும்பு மாவட்டத்தில் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத் திட்டம்

18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தால் செயற்படுத்தப்படும் இந்த வேலைத் திட்டம் காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 24,000 பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.