உள்நாட்டு செய்தி
அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம்…
நாட்டில் அமுல்ப்படுத்தப்படிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்று நிரூபத்தின் படி, கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொற்றா நோயுள்ள அதிகாரிகளை பணிக்கு அழைக்கக்கூடாது.
அத்தகைய அதிகாரிகள் அத்தியாவசிய நேரத்தில் மாத்திரம் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும். எனினும், அவர்களுக்கு பணிக்கு வருவதற்கும் மீண்டும் வீடு திரும்புவதற்கும் குறிப்பிட்ட காலம் ஒதுக்கிக் கொடுக்கப்படல் வேண்டும்.
உரிய சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் சேவையினை வழங்கும் பொறுப்பினை நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்க வேண்டும்.
அதன்படி, நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் ஊழியர்களை குழுக்களாகப் பிரிப்பதற்கும், தேவைப்பட்டால், குழு உறுப்பினர்களின் செயல்பாடுகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்துவதற்கும், முடிந்தவரை பிரிவுகளுக்கு இடையேயான ஒன்று கூடலை தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.