Sports
இலங்கை அணி அடுத்த வருடம் இந்தியாவுக்கு விஜயம்

2021-22 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
அதன்படி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வருடம் இந்தியாவுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி இலங்கையணி அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த தொடரில் டெஸ்ட் மற்றும் T20 போட்டிகள் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 2 டெஸ்ட் மற்றும் 3 T20 போட்டிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.