உலகம்
உலக கொரோனா நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.46 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.11 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46.29 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.88 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 1.03 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதேவேளை, இலங்கையில் நேற்று (10) இரவு 131 கொரோனா மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கன தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.