Connect with us

உலகம்

இந்தியாவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Published

on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், நேற்றைய பாதிப்பை விட இன்று 14 சதவீதம் அதிகரித்துள்ளது.   

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

(கேரளாவில் மட்டும் 30,196 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,39,981 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,41,749 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,04,618 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,93,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.