Connect with us

உள்நாட்டு செய்தி

உலக கொரோனா பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 33 இலட்சத்து 58 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 88 இலட்சத்து 83 ஆயிரத்து 264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடியே 98 இலட்சத்து 67 ஆயிரத்து 153 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 46 இலட்சத்து 8 ஆயிரத்து 492 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று இலங்கையில் 185 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,689 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 474,780 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 389,969 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, உலகில் கொரோனா தொற்று பரவலில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் இந்த நிலைமையை எண்ணி மன நிறைவு அடையக் முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.