Connect with us

உள்நாட்டு செய்தி

நேற்று 184 கொவிட் மரணங்கள்

Published

on

நாட்டில் நேற்றைய தினம் (06) 184 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (07) தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,504 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 470,722 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 388,278 ஆக அதிகரித்துள்ளது.