உள்நாட்டு செய்தி
அவசரகால சட்ட விதிமுறைகள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகால சட்ட விதிமுறைகள் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவசரகால சட்ட விதிமுறைகளுக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதை தடுத்து, அவற்றின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வர்த்தமானியில் அறிவித்த அவசரகால சட்ட விதிமுறைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.