Connect with us

உள்நாட்டு செய்தி

அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொவிட் 19 சிகிச்சை நிலைய கட்டிடம்

Published

on

அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொவிட் 19 சிகிச்சை நிலைய கட்டிடம் இன்று (05) வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மற்றும் ஏ.எச்.எஸ் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த கொவிட் கட்டிடத்தை அமைத்துள்ளன.

8 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டிட கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிட தொகுதியில்,  வைத்தியர்கள், தாதியர்களுக்கான ஓய்வறைகள், நோயார்களுக்கான உணவு விடுதி, 28 கட்டில்கள் உள்ளன

டிக்கோயா மாவட்ட வைத்திய சாலையில்  உள்ள கொவிட் 19  தொற்றார் சிகிச்சை வார்ட்டில் இட நெருக்கடி காரணமாக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க ஏ.எச்.எஸ் தனியார் நிறுவனால் 80 லட்சம் ருபாய் செலவில்  இந்த சிகிச்சை நிலைய புதிய கட்டிடம் அமைத்து கையளிக்கப்பட்டது.

சுகாதார விதிமுறைகளோடு இடம்பெற்ற இந் நிகழ்வில் ஏ.எச்.எஸ் தனியார் நிறுவனம் மற்றும் டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலை  நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர்.