உள்நாட்டு செய்தி
பெருந்தோட்ட மக்களுக்கு தொடர்ந்தும் பாரபட்சம் : வடிவேல் சுரேஸ்
மலையக மக்களுக்கு நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சமாக செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட குரல் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.
‘அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 2000 ரூபாய் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரண பொதி ஆகியவற்றை வழங்கும் திட்டத்தில் ஒரு சில அரசாங்க உத்தியோகஸ்த்தர்கள் பாரபட்சமாக செயற்படுகின்றனர்.
இதற்கு எதிராக அரசாங்கத்தினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ரீதியில் அனைவரும் செயற்பட வேண்டும். மலையக மக்களே மாற்றாந்தாய் மனபான்மையுடன் செயற்பட கூடாது. மேலும் பெருந்தோட்ட கம்பனிகள் சந்தா பணம் நிறுத்தப்பட்டுள்ளமையால் மக்களுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவை பிரிக்க முடியும் என கனவு காணகூடாது’ என தெரிவித்துள்ளார்.