உள்நாட்டு செய்தி
தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்தி விடும் : மாவை

தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்தி விடுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அவருடைய இல்லத்தில் நடந்த ஊடக சந்திப்பிலே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தமிழரசுக் கட்சி தனித்தும் ஏனைய கட்சிகள் தனித்து இயங்கப் போவதாகவும் வெளியான செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.