உள்நாட்டு செய்தி
நியூசிலாந்தின் ஒக்லாந்து பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் – இலங்கையர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

நியூசிலாந்தின் ஒக்லாந்து பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கத்தியால் தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியதாவது:
“சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி கடந்த 2011ல் இலங்கையில் இருந்து வந்தவன்.
பிரிவினைவாத கொள்கை மற்றும் ஐ.எஸ் அமைப்பு மீதான ஆதரவு காரணமாக, கண்காணிப்பு பட்டியலில் அவன் இருந்துள்ளான்.
ஒக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்ற அவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி உள்ளான்.
இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
அவனை கண்காணித்துபடியே பின் தொடர்ந்து வந்த போலீசார், கத்தியால் தாக்க துவங்கிய 60 நொடிகளில் சுட்டு கொன்றனர்.
அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க தவறான செயல் நடந்துள்ளது. கோர்ட் உத்தரவு காரணமாக கொல்லப்பட்ட பயங்கரவாதி பற்றிய தகவலை வெளியிட முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி, கடந்த 2016ல் பொது மக்களை தாக்க திட்டமிடப்பட்ட வழக்கில் கைதாகி சிறை சென்றவன் என்பது தெரிய வந்துள்ளது.
பொது மக்களை கொல்லும் நோக்கத்திலேயே தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.