உள்நாட்டு செய்தி
தென்னாபிரிக்காவில் கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு
தென்னாபிரிக்காவில் கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்டவற்றில் இது மிகவும் திரிபுடையது என ‘த ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிகையின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவின் தொற்று நோய்களுக்கான தேசிய கற்கை மற்றும் குவாசுலு நட்டால் ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆய்வில் புதிய பிறழ்வு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது .
இந்த தொற்று வேகமாக பரவுவதுடன், இதற்கான தடுப்பூசியின் பெறுபேறு மந்தமாகவே உள்ளதாகவும் குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
C.1.2 என புதிய பிறழ்வு விஞ்ஞான ரீதியில் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திரிபு கடந்த மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய கொவிட் திரிபானது இதுவரை இங்கிலாந்து, சீனா, கொங்கோ, மொரஷியஸ், நியூசிலாந்து, போர்த்துக்கல் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளதாக ‘த ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிகையின் இணையப்பக்கத்தில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.