Connect with us

உலகம்

உலக கொரோனா பாதிப்பு 21.71 கோடியைக் கடந்தது (அப்டேட்)

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45.14 இலட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.71 கோடியைக் கடந்துள்ளது.

தொற்றிலிருந்து இதுவரை 19.40 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.85 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1.13 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதேவேளை, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஸ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இலங்கையில் நேற்று (29) புதிதாக 192 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்னர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 8,775 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 426,169 ஆக உயர்ந்துள்ளது.