Connect with us

Uncategorized

உலக கொரோனா பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.14 கோடியைக் கடந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.92 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 44.26 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.78 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1.09 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இதேவேளை, நேற்று (20) இலங்கையில் 195 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,790 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 381,812 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 320,810 ஆகும்.