உலகம்
ஆப்கான் இஸ்லாமிய இராஜியமானது
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை அமைப்பது சவாலான விடயம் என சர்வதேச அரசியல் அவதானியர்கள் கூறியுள்ளனர்.
எனினும், புதிய ஜனாதிபதி மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய அரசின் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் 1919 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நினைவாக 102 ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய இராச்சியமாக தலிபான்கள் பிரகடனம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.