Connect with us

உள்நாட்டு செய்தி

சிலாபம் நகரை ஒரு வார காலம் மூடுவதற்கு தீர்மானம்

Published

on

சிலாபம் நகரை ஒரு வார காலம் மூடுவதற்கு சிலாபம் நகர சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர சபையின் உப தலைவர் சட்டத்தரணி ஏ.டபிள்யூ சாதிக்குல் அமீன் தெரிவித்தார்.

சிலாபம் மருத்துவ அதிகார பிரிவிற்குள் 700 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, கொரோனா பாதுகாப்பு சம்பந்தமாக நகர சபையின் தலைவர் துசான் அபேசேகர தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துறையாடலின் போதே இந்த தீரம்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் இம்மாதம் 22ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரை ஒருவார காலம் நகரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சகல வர்த்தக நிலையங்களும் மூடப்படுவதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் இடம்பெறாது எனவும் அவர் கூறினார்.

அத்துடன், பிரதான மரக்கறி மற்றும் மீன் சந்தை என்பனவும் மூடப்படுவதுடன், இதற்கு சிலாபம் வரத்தக சங்கம் மற்றும் சிலாபம் முச்சக்கர வண்டி சங்கம் என்பனவும் நகரை மூடும் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

எனவே, இந்த காலப்பகுதியில் பொதுமக்களும் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறும் இதன்போது கோரிக்கை விடுப்பதாக சிலாபம் நகர சபையின் உப தலைவர் சட்டத்தணி ஏ.டபிள்யூ சாதிக்குல் அமீன் மேலும் தெரிவித்தார்.