Connect with us

Sports

T20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராகும் இலங்கையணி

Published

on

T20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராகும் நோக்குடன் விசேட கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அதேபோல் எதிர்வரும் தென்னாபிரிக்க தொடருக்கான ஆயத்தமாகும் வகையிலும் இந்த தொடர் நடத்தப்படவுள்ளது.

அதன்படி இந்த தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை தேசிய அணி வீரர்களும் முதற்தர அணி வீரர்களும் இந்த போட்டியில் கலந்துக்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 4 அணிகள் பங்குகொள்ளவுள்ளதுடன், ஒவ்வொரு அணியும் முதற்சுற்றில் 6 போட்டிகளில் மோதும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி முதல் இரு இடங்களையும் பிடிக்கும் அணிகள் ஒகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இடம்பெறும் இறுதிப் போட்டியில் மோதும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.