Connect with us

உள்நாட்டு செய்தி

மலையகத்தைச் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இ.தொ.கா. நடவடிக்கை

Published

on

மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கீழ் இயங்கும் பிரஜா சக்தி அமைப்பின் ஊடாக இந்த நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்க, விசேட தொலைபேசி இலக்கங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய, 0715550666 மற்றும் 0512222422 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புக்கொண்டு, வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவர் தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களின் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான யோசனைகளையும் பெற்றுக்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதற்கான ஆலோசணைகளை அனுப்பி வைக்க ஜீவன் தொண்டமான், தனது மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளார்.

இதன்படி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தமது யோசனைகளை அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, சிறுவர்கள்  பாடசாலைகளிலிருந்து இடைவிலகல் தொடர்பிலும் தகவல்களை திரட்டுவதற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.