உள்நாட்டு செய்தி
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும்

பயண கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலார்களை சந்தித்த அவர் ,சமீபத்தில் நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் இடம்பெறும். பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டால் வழமை போன்று பொது போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.