உள்நாட்டு செய்தி
உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 61 பேரும் எதிராக 152 பேரும் வாக்களித்தனர்.
இதற்கமைய, நம்பிக்கையில்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (19) ஆரம்பமானதுடன், இன்றும் இடம்பெற்றது.