Sports
சந்திமால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்க்கு கடிதம்

முன்னாள் இலங்கையணி தலைவர் தினேஸ் சந்திமால் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கலந்துரையாட சந்தர்ப்பம் அளிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் அனுமதி கேட்டுள்ளார்.
அரவிந்த டி சில்வா மற்றும் கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி சந்திமால் குறித்த அனுமதியை கேட்டுள்ளார்.
“கிரிக்கெட் என்பது எனது தொழில். எனவே அது குறித்து கலந்து பேச வேண்டும். அந்த கலந்துரையாடல் எனது எதிர்காலம் தொடர்பில் தீர்மானிக்க வாய்ப்பாக அமையும்” என கூறியுள்ளார்.