உள்நாட்டு செய்தி
மேல் மாகாணத்தில் இன்று முதல் மேலும் 103 ரயில்கள்

மேல் மாகாணத்தில் இன்று முதல் மேலும் 103 ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பயண நேரங்களை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க முடியும் என ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரதான ரயில் மார்க்கத்தில் 36 ரயில்களும் , கரையோர மார்க்கத்தில் 42 ரயில்களும் , களனி மார்க்கத்தில் 10 ரயில்களும் , சிலாபம் மார்க்கத்தில் 15 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.