Sports
பானுக ராஜபக்ஸவுக்கு ஓராண்டு போட்டி தடை – ஶ்ரீலங்கா கிரிக்கெட்

இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஸவுக்கு இரண்டு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு கால அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2019/2020 ஆண்டுக்கான ஒப்பந்த விதி முறைகளை மீறி, சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடக நேர்காணல்களில் கருத்து வெளியிட்டமைக்கான இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் மீண்டும் இவ்வாறான தவறை இழைத்தால், அவருக்கு ஒரு வருட காலத்துக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்ற தடை விதிக்கப்படும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
மேலும், அவருக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.