Sports
இங்கிலாந்திடம் ஒருநாள் தொடரையும் இழந்தது இலங்கை

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒரு நாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இந்த போட்டி பிரிஸ்டல் மைதானத்தில் இடம்பெற்றது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கையணிக்கு வழங்கியது.
அதன்படி இலங்கையணி 41.1 ஓவர்களை எதிர்க் கொண்டு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இலங்கையின் துடுப்பாட்டத்தில் தசுன் ச்சானக்க ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டார்.
இங்கிலாந்து சார்பில் சேம் கரன் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
167 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாட இங்கிலாந்து தயாராக இருந்த போது மழை குறுக்கீடு செய்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
தொடர் நாயகன் விருது டேவிட் வில்லேவுக்கு அளிக்கப்பட்டது.
ஏற்கனவே, டி20 தொடரை 3-0 என இலங்கை அணி இழந்திருந்தது