உள்நாட்டு செய்தி
டயகம வௌரலி தோட்டத்தில் மூன்று அடி நீளமான சிறுத்தை

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வௌரலி தோட்டத்திலே அண்மித்த பகுதியில் உள்ள ஆக்ரோயா ஆற்றிக்கு அருகாமையில் உள்ள புற்தரையில் இறந்த நிலையில் மூன்று அடி நீளம் கொண்ட சிறுத்தை ஒன்று நுவரெலியா வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸார் 04 திகதியான இன்று மீட்டுள்ளனர்.
இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் அப்பகுதிக்கு விஜய் செய்த போது சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பிதனை கண்டு அது தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கி தகலினையடுத்தே குறித்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் சிறுத்தையின் இறந்த உடவினை மீட்டு நுவரெலியாவிற்கு எடுத்து சென்றுள்ளனர் .
இதே வேளை சிறுத்தையின் கழுத்து பகுதியில் காயங்கள் காணப்படுவதால் இது தானாக இறந்ததா அல்லது தாக்குதல் காரணமாக இற்ந்துள்ளதா? என்பது தொடர்பாக பரிசோதனையின் உடலினை பறிசோதனை செயத பின்னர். அறிவிக்க முடியும் என திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பிரதேச மக்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் அடிக்கடி இப்பிரதேசத்தில் சிறுத்தைகளின் நட மாற்றம் இருப்பதாகவும் இதனால் நாம் பாரிய பிரச்சினைகளை சந்திப்பதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பினை வழங்குமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.