உள்நாட்டு செய்தி
நேற்று கொவிட் தொற்றாளர்கள் பதிவான இடங்கள்

இன்று (30) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,717 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 348 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 280 பேரும் கண்டி மாவட்டத்தில் 73 பேரும் யாழ். மாவட்டத்தில் 08 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 86 நபர்களும் அம்பாறை மாவட்டத்தில் 89 பேரும் நுவெரலியா மாவட்டத்தில் 15 பேரும் பதுளை மாவட்டத்தில் 66 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 84 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 7 பேரும் வவுனியா மாவட்டத்தில் 11 பேரும் மன்னார் மாவட்டத்தில் மூவரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.